< Back
மாநில செய்திகள்
கனமழை - மதுரையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கும் 2 விமானங்கள்
மாநில செய்திகள்

கனமழை - மதுரையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கும் 2 விமானங்கள்

தினத்தந்தி
|
24 Oct 2024 9:29 PM IST

சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தபோது மழை காரணமாக தரையிறங்க முடியாத சூழல் நிலவுகிறது.

மதுரை,

மதுரையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தற்போதும் அங்கு கனமழை பெய்து வருவதால் சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த 2 இண்டிகோ விமானங்கள் தரையிறங்க முடியாத சூழல் நிலவுகிறது. கடந்த 1 மணி நேரத்திற்கு மேலாக 2 விமானங்களும் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வருகின்றன.

அதனால் தூத்துக்குடி மற்றும் திருச்சி விமான நிலையங்களில் தரையிறக்க ஏற்பாடுகள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்