< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மம்தா பானர்ஜிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
|5 Jan 2025 11:33 AM IST
மம்தா பானர்ஜிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
மேற்கு வங்காள முதல்-மந்திரியும். எனது அன்பிற்கினிய சகோதரியுமான மம்தா பானர்ஜிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். பொதுச் சேவையில் உங்கள் அர்ப்பணிப்பு நல்ல மாற்றத்தைத் ஏற்படுத்தட்டும். மகிழ்ச்சி, உடல்நலம் மற்றும் வெற்றிகள் நிறைந்த நீண்ட ஆயுளை பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.