குரூப்-4 பணியிடங்கள்: அன்புமணி ராமதாசுக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பதில்
|டி.என்.பி.எஸ்.சி.யை திமுக அரசு சிறப்பாக வழிநடத்தி கொண்டிருக்கிறது என்று அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறியுள்ளார்.
சென்னை,
மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அரசுப் பணியிடங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஏற்ற வகையில்தான் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். தேவைக்கு ஏற்ப அல்லது புதிய துறைகள் திட்டங்கள் வரும்போது மற்றும் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் அரசு பணியிடங்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட அளவு உருவாகும். இதன்படி ஒவ்வொரு ஆண்டும் உருவாகும் காலி பணியிடங்களின் தேவைக்கேற்ப அரசுப் பணியாளர்களை தேர்வு செய்யப்படுகிறது குருப் 4 இடங்களை 15 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என் சொல்கிறார் அன்புமணி ராமதாஸ்.
அந்த 15 ஆயிரம் பேருக்கு போதுமான எண்ணிக்கையில் தேவையான பணியிடங்கள் காலியாக இருக்க வேண்டும் என்பது நிர்வாக விதி. இதை அன்புமணி ராமதாஸ் அறியாதவர் அல்லர். குரூப்-4 காலியிடங்களின் எண்ணிக்கையை வெறும் 2,208 மட்டுமே உயர்த்தி டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது' என்கிறார் அன்புமணி ராமதாஸ். இருக்கும் இடங்களுக்கு ஏற்பத் தான் பனியாளர்களை தேர்வு செய்ப முடியும்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழக்கும் விஷயத்தில் தமிழக காட்டும் அக்கறையின்மை கண்டிக்கத்தக்கது என சொல்லியிருக்கிறார் அன்புமணி ராமதாஸ்., இளைஞர்கள் மீது அக்கறைண்டதால்தான் முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் அரசுத் துறைகளில் 68,039 இளைஞர்களுக்கும், தனியார் 5,08,055 இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்தியா மட்டுமல்ல உலகின் பெரிய நிறுவனங்களும் முதலிடு செய்யும் முகவரியாக தமிழ்நாட்டை திமுக அரசு மாற்றியதால்தான் கடந்த 3ஆண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை ஈர்த்து 31 லட்சம் பேர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். அதோடு நிற்காமல் உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து முதலீடுகளை தமிழக அரசு ஈர்த்து வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமல்ல. அதை விரைந்து செயடுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு கூடிய அமைச்சரவை கூட்டத்தில் 38 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பினை புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 46 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இப்படி இளைஞர்களின் வேலைளைய்ப்புக்கு வேண்டிய அத்தனை முயற்சிகளையும் தமிழக அரசு முன்னெடுக்கிறது.
ஓராண்டுக்கு மேலாக யாரும் நியமிக்கப்படாத நிலையில், டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவியை நிரப்ப வேண்டும் என்ற நோக்கில் ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை தேர்வு செய்து, பரிந்துரையை கவர்னர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பினோம். ஆனால் அவர் காலம் தாழ்த்தி திருப்பி அனுப்பினார். கவர்னர் எழுப்பிய கேள்விகளுக்கு அஅர்சு விளக்கம் அளித்தும் கவர்னர் செவிசாய்க்கவில்லை. கடைசியில் போராடி தேர்வாணையத்தின் தலைவராக எஸ்.கே.பிரபாகர் கடந்த மாதம்தான் நியமிக்கப்பட்டார்.
அப்போது கவர்னர் முட்டுக்கட்டை போட்டபோது அவரை கண்டித்து அறிக்கை விடாத அன்புமணி ராமதாஸ், குரூப்-4 பணியிடங்களுக்கு ஏன் கவகைப்படுகிறார்?. ராஜ்பவனில்அமர்ந்து கொண்டு தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிராக செயல்பட்டு கொண்டிருக்கும் கவர்னரை கண்டித்தால் கூட்டணி கட்சியான பாஜக கோபித்து கொள்ளும் என்ற கவலையில் கடிதோச்சி மெல்ல எறிக பாணியில் அரசியல் நடத்தும் அன்புமணி டி.என்.பி.எஸ்.சி பற்றி எல்லாம் பேசலாமா?.
டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டால் ஒழுங்கா படிச்சு தேர்வு எழுதின ஆயிரக்கணக்கானோரின் வேலைவாய்ப்புகள் அ.தி.மு.க ஆட்சியில் பறிபோயின. 2011-ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக நடந்த முறைகேட்டின் உச்சமாக 2019 செப்டம்பரில் நடந்த குரூப்-4 தேர்வில், மெகா முறைகேடுகள் அரங்கேறின. அப்போதெல்லாம் அன்புமணி எங்கே போனார்?.
போலீஸ் எஸ்.ஐ. சித்தாண்டியும் சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஜெயக்குமாரும் இடைத் தரகர்களாகச் செயல்பட்டு கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்து நூற்றுக்கணக்கானவர்களுக்கு பணியிடங்கள் பெற்றுத் தந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது எல்லாம் நினைவில் இல்லையா? முந்தைய ஆட்சியில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான கேள்வித் தாள்கள் இடைத் தரகர்களுக்குக் கைமாறின. இப்படியான முறைகேடுகள் எல்லாம் நடக்காமல் டி.என்.பி.எஸ்.சி.யை திமுக அரசு சிறப்பாக வழிநடத்தி கொண்டிருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.