< Back
மாநில செய்திகள்

மாநில செய்திகள்
காணும் பொங்கல் விடுமுறையை ரத்து செய்ய பரிந்துரைக்க உள்ளதாக பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை

20 Jan 2025 4:52 PM IST
காணும் பொங்கல் விடுமுறையை ரத்து செய்யக் கோரி தமிழக அரசுக்கு பரிந்துரைக்க உள்ளதாக பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை மக்கள் காணும் பொங்கலன்று (ஜன. 16) மெரீனா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலாப் பகுதிகளில் லட்சக்கணக்கானோர் குவிந்தனர். இந்த கொண்டாட்டத்தின்போது, பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட குப்பைகளை கடற்கரைகளிலேயே மக்கள் போட்டுச் சென்றதால் கடும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டது. பல நூறு டன் குப்பைகள் அகற்றப்பட்டது.
இந்த நிலையில், மெரீனா கடற்கரை குப்பைக் கூளமாக மாறுவதற்கு மக்கள்தான் காரணம் என்று தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. மேலும், காணும் பொங்கலன்று விடுமுறை அளிப்பதை ரத்து செய்யக் கோரி தமிழக அரசுக்கு பரிந்துரைப்போம் என்று பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.