< Back
மாநில செய்திகள்

மாநில செய்திகள்
ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் படகுகள் இயக்க தடை - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

7 Feb 2025 5:49 PM IST
அரசாணையை அமல்படுத்த தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்று பசுமை தீர்ப்பாயம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை,
சமீப காலங்களில் ஆமைகளின் இறப்பானது அதிக அளவு ஏற்பட்டு வருகிறது. இதனால் அரசாங்கம் ஆமைகளின் இனப்பெருக்க காலங்களில் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் விசைப் படகுகள் செல்ல தடை விதித்தது.
இருப்பினும் இந்த உத்தரவானது இன்னும் அமல்படுத்தப்பட வில்லை என பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரிய வகை ஆமைகள் உயிரிழக்க வாய்ப்புகள் உள்ள நிலையில் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை விசைப்படகுகள் இயக்க தடை விதித்த அரசாணையை இன்னும் அமல் படுத்தாதது ஏன் என தீர்ப்பாயம் கேள்வி எழுப்பி உள்ளது. அரசாணையை அமல்படுத்த தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்று பசுமை தீர்ப்பாயம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.