< Back
மாநில செய்திகள்
நெல்லை அருகே அரசு பஸ்  - மினி லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: இருவர் பலி
மாநில செய்திகள்

நெல்லை அருகே அரசு பஸ் - மினி லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: இருவர் பலி

தினத்தந்தி
|
25 Oct 2024 12:20 PM IST

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பில் அரசு பஸ்சும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலியாகினர்.

நாங்குநேரி

நெல்லை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை மூன்றடைப்பு அருகே அரசு பஸ்சும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.உயிரிழந்தவர்கள் நாங்குநேரி அருகே உள்ள படலையார் குளம் ஜே ஜே நகரைச் சேர்ந்த சுடலை மகன் மாயாண்டி மகேஷ்( வயது 20) , முதலைக்குளம் செல்வராஜ் மகன் உசிலவேல் (36) என அடையாளம் தெரியவந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்