< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
4 நாள் பயணமாக டெல்லி சென்றார் கவர்னர் ஆர்.என்.ரவி
|22 Dec 2024 11:52 PM IST
டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு 25-ந் தேதி கவர்னர் மீண்டும் சென்னை திரும்புகிறார்.
சென்னை,
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, 4 நாள் பயணமாக இன்று டெல்லிக்கு சென்றுள்ளார். ஏர் இந்தியா விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
இது கவர்னரின் சொந்த பயணம் என்றும், கவர்னரின் டெல்லி பயணத்தில் வேறு முக்கியத்துவம் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது. டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு வருகிற 25-ந் தேதி கவர்னர் மீண்டும் சென்னை திரும்புகிறார்.