< Back
மாநில செய்திகள்
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு
மாநில செய்திகள்

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு

தினத்தந்தி
|
15 Oct 2024 8:27 PM IST

தமிழகத்தில் மழை பாதிப்புகளை சரிசெய்ய தமிழக அரசு அனைத்து சாத்தியமான வழிகளிலும் முயற்சித்து வருகிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

சென்னை,

சேலத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

வானிலை மையத்தின் எச்சரிக்கைக்கு ஏற்ற வகையில் மழையை எதிர்கொள்ள அரசு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. மழை பாதிப்புகளை சரி செய்ய சாத்தியமான அனைத்து வழிவகைகளிலும் முயற்சித்து வருகிறது. வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகம் பெய்யும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது. அதற்கு ஏற்ற வகையில் தமிழக அரசு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. மழை பாதிப்புகளை தமிழக அரசு முறையாக கையாளும் என நம்புகிறேன் என்றார்.

மேலும் செய்திகள்