< Back
மாநில செய்திகள்
அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர்:  சென்னை ஐகோர்ட்டு
மாநில செய்திகள்

அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர்: சென்னை ஐகோர்ட்டு

தினத்தந்தி
|
17 Oct 2024 6:26 PM IST

அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர் என்று சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.

சென்னை,

அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர் என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. ஆயுள் தண்டனைக் கைதியை முன்கூட்டியே விடுவிக்க அரசின் பரிந்துரையை நிராகரித்ததற்கு எதிரான வழக்கில், கவர்னர் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும், அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர் எனவும் அதனை கவர்னர் மீற முடியாது என்றும் சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை மேற்கோள் காட்டிய சென்னை ஐகோர்ட்டு மேற்கண்ட உத்தரவினை பிறப்பித்துள்ளது.

மேலும் செய்திகள்