< Back
மாநில செய்திகள்

மாநில செய்திகள்
டீசல் பஸ்களை சி.என்.ஜி பஸ்களாக மாற்ற அரசுப் போக்குவரத்துதுறை முடிவு

3 March 2025 9:36 AM IST
முதற்கட்டமாக ஆயிரம் டீசல் பஸ்களை, சி.என்.ஜி பஸ்களாக மாற்ற அரசுப் போக்குவரத்துதுறை முடிவு செய்துள்ளது.
சென்னை,
தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்துகழகத்தின் பஸ்கள் உள்ளூர், வெளி மாவட்டங்கள் என பல வழித்தடங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் டீசல் எரிபொருளில் இயங்கி வரும் நிலையில், எரிபொருள் தட்டுப்பாட்டை குறைக்கும் விதமாக பஸ்களை சி.என்.ஜி (CNG) கேஸ் எரிபொருள் முறைக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதன்படி தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக, ஆயிரம் பஸ்கள் சி.என்.ஜி. பஸ்களாக மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் 8 லட்சம் கி,மீக்கு குறைவாக இயக்கப்பட்டவையாகவோ அல்லது 6-7 ஆண்டுகளுக்குள் வாங்கப்பட்ட பஸ்களாகவோ இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு ரூ.70 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.