< Back
மாநில செய்திகள்
மழையை எதிர்கொள்ள அரசு தயார்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநில செய்திகள்

மழையை எதிர்கொள்ள அரசு தயார்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
25 Nov 2024 12:08 PM IST

நாடாளுமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்பது குறித்து எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட எழில் நகரில் மறுசீரமைக்கப்பட்ட மழலையர் பள்ளி வகுப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அதன் பின்னர் முதல்-அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

* நாடாளுமன்ற கூட்ட தொடரில் என்ன பேச வேண்டும் என்பது குறித்து எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு தேவையான விஷயங்களை நாடாளுமன்றத்தில் பேசுவதில் எம்.பி.க்கள் கவனம் செலுத்துவார்கள்.

* பருவமழையை எதிர்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மழை வருதோ வரவில்லையோ, அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. என்றார்.

* அதானி விவாகரத்தில் தமிழக அரசு தனது நிலையை தெரிவிக்க வேண்டுமென ராமதாஸ் தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அரசியல் ரீதியாக ஒவ்வொரு நாளும் அறிக்கை வாயிலாக ராமதாஸ் பேசி வருகிறார். அதற்கு தற்போது பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை." என முதல்-அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்