< Back
மாநில செய்திகள்
விரைவில் 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி - துணை முதல்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மாநில செய்திகள்

'விரைவில் 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி' - துணை முதல்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தினத்தந்தி
|
19 Oct 2024 1:24 PM IST

திருவண்ணாமலையில் ரூ.10 கோடியில் சர்வதேச தரத்தில் ஆக்கி மைதானம் அமைக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்

திருவண்ணாமலை :

திருவண்ணாமலையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது இதில் கலந்துகொண்ட துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார் தொடர்ந்து விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின் ,

திருவண்ணாமலையில் ரூ.10 கோடியில் சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம் அமைக்கப்படும். விரைவில் பணிகள் தொடங்கப்பட்டு ஓராண்டிற்குள் ஹாக்கி மைதானம் கட்டி முடிக்கப்படும்.விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கத்திலேயே முதல்- அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது.

100 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி வழங்க உள்ளோம். 2 ஆண்டுகளில் 513 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.10 கோடி நிதியுதவி வழங்கியுள்ளோம். தமிழகத்தில்தான் விளையாட்டு வீரர்களுக்கு இந்த அளவு பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

மேலும் செய்திகள்