< Back
மாநில செய்திகள்
அரசு பஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
மாநில செய்திகள்

அரசு பஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
25 Nov 2024 3:55 AM IST

அரசு பஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பர்னாட்டிவிளை பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ். இவருடைய மகன் பீட்டர் புஷ்பராஜ் . இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் திங்கள்சந்தை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணியாற்றி வந்தார். பீட்டர் புஷ்பராஜின் பெற்றோர் இறந்து விட்டனர்.

மேலும், பீட்டர் புஷ்பராஜூக்கு 2 சகோதரர்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி ஆங்காங்கே வசித்து வருகின்றனர். கடந்த 6 மாதங்களாக பீட்டர் புஷ்பராஜ் திங்கள்சந்தை அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி பணிக்கு சென்று வந்தார். கடந்த 2 நாட்களாக பீட்டர் புஷ்பராஜின் அறை திறக்கப்படாமல் உள்பக்கமாக பூட்டிய நிலையில் இருந்தது.

இந்த நிலையில் நேற்று மதியம் அந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த விடுதி உரிமையாளர் இதுபற்றி இரணியல் போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அங்கு பீட்டர் புஷ்பராஜ் உடல் அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதைதொடர்ந்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்