< Back
மாநில செய்திகள்
விவேகானந்தர் பாறையில் கண்ணாடி பாலம் - பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு
மாநில செய்திகள்

விவேகானந்தர் பாறையில் கண்ணாடி பாலம் - பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு

தினத்தந்தி
|
14 Nov 2024 7:32 PM IST

கண்ணாடி பாலத்தின் கட்டுமான பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி கடலின் நடுவே உள்ள பாறைகளில் சுவாமி விவேகானந்தர் நினைவிடம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் அமைந்துள்ளது. இங்குள்ள திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் நினைவிடத்திற்கும் இடையே பாதை ஏற்படுத்தும் வகையில் கண்ணாடி பாலம் அமைக்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. அதன்படி திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறையை இணைக்கும் வகையில் கண்ணாடி இழை பாலம் ரூ. 37 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது.

சுமார் 77 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்தில் இப்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடல் சீற்றத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் கடின தன்மை கொண்டதாக கண்ணாடி இழை பாலம் அமைக்கப்படுகிறது. இதற்காகத் திருவள்ளுவர் சிலை அருகேயும், விவேகானந்தர் பாறையிலும் கம்பிகள் பொருத்தப்பட்டு கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கண்ணாடி பாலத்தின் கட்டுமான பணிகளை நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா, முன்னாள் அமைச்சரும், பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினருமான மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ஆர்.மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்