< Back
தமிழக செய்திகள்
புதிய பூங்காக்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு: அமைச்சர் கே.என்.நேரு
தமிழக செய்திகள்

புதிய பூங்காக்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு: அமைச்சர் கே.என்.நேரு

தினத்தந்தி
|
27 March 2025 10:13 AM IST

புதிய பூங்காக்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபையின் இன்றைய கேள்வி-பதில் நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார், கிருஷ்ணகிரி தொகுதியில் புதிதாக பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, புதிய பூங்கா அமைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. புதிய பூங்காக்களை அமைக்கத் தேவையான நிதியை முதல்-அமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார். எனவே இடம் இருந்தால் புதிய பூங்கா அமைக்க இந்த ஆண்டே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்