சென்னையில் அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவச உணவு - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
|தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. முக்கிய சாலைகள், தெருக்கள் மற்றும் சுரங்கப்பாதைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது . தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் உணவு இலவசமாக வழங்கப்படும் என முதல் அமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார் .
இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரண பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை - எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும். என குறிப்பிட்டுள்ளார்.