< Back
மாநில செய்திகள்
புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் எம்.டி.ஆர் ராமச்சந்திரன் காலமானார்
மாநில செய்திகள்

புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் எம்.டி.ஆர் ராமச்சந்திரன் காலமானார்

தினத்தந்தி
|
8 Dec 2024 9:37 PM IST

புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் எம்.டி.ஆர் ராமச்சந்திரன் காலமானார்.

சென்னை,

புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் எம்.டி.ஆர்.ராமச்சந்திரன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 93. உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எம்.டி.ஆர் ராமச்சந்திரன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1980-1983 மற்றும் 1990-1991 வரை திமுக சார்பில் புதுச்சேரி முதல்-அமைச்சராக பணியாற்றினார்; 2001- 2006 வரை புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகராகவும் காங்கிரஸ் கட்சி சார்பில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்