< Back
மாநில செய்திகள்
குற்றால அருவிகளில் 3-ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
மாநில செய்திகள்

குற்றால அருவிகளில் 3-ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

தினத்தந்தி
|
14 Dec 2024 9:56 AM IST

குற்றால அருவிகளில் 3-ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்காசி,

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென்காசி மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன்படி தென்காசி மாவட்டத்தில் கொட்டிய கனமழையால் குற்றாலம் அருவிகளில் வரலாறு காணாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் குற்றால அருவிகளில் 3-ஆவது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மிக மோசமாக இருக்கும் நிலையில், அங்கு யாரும் சென்றுவிடாமல் இருக்க போலீசாரும், மாவட்ட நிர்வாகமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக கனமழையால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவியில் மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த காட்டாற்று வெள்ளம் போல நீர் அங்குள்ள பாலங்களுக்கு அருகே பாய்ந்து சென்றது. மேலும், அங்கு அருகே அமைக்கப்பட்டு இருந்த கடைகளிலும் கூட வெள்ள நீர் புகுந்தது.

மேலும் செய்திகள்