< Back
மாநில செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் திடீர் வெள்ளம் - பக்தர்கள் சிக்கித்தவிப்பு
மாநில செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் திடீர் வெள்ளம் - பக்தர்கள் சிக்கித்தவிப்பு

தினத்தந்தி
|
1 Nov 2024 10:56 PM IST

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 150 பக்தர்கள் சிக்கித் தவித்தனர்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ராக்காச்சி அம்மன் கோவில் உள்ளது. இன்று தீபாவளி மறுநாள் விடுமுறை தினம் என்பதால், அருகில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பலர் கோவிலுக்கு சென்றுவிட்டு அங்குள்ள ஆற்றில் குளிக்கச் சென்றனர்.

இந்த நிலையில் திடீரென அந்த பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து கோவிலுக்குச் சென்ற பெண்கள் உட்பட சுமார் 150 பக்தர்கள் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சிக்கித் தவித்தனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ராஜபாளையம் தீயணைப்புத் துறையினர் அங்குள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.


மேலும் செய்திகள்