< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தென்காசி: தனியார் எரிவாயு நிறுவன வாகனத்தில் திடீர் தீ விபத்து
|7 Jan 2025 1:52 AM IST
தென்காசியில் தனியார் எரிவாயு நிறுவன வாகனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தென்காசி,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தனியார் எரிவாயு நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தில் நேற்று இரவு சங்கரன்கோவில் நகரில் சென்றுகொண்டிருந்தபோது திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
வாகனத்தில் சிலிண்டர்கள் இல்லாதபோது இந்த தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக, வாகனத்தில் இருந்து டிரைவர் கிழே இறங்கி உயிர் தப்பினார்.
இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வாகனத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். வாகனத்தில் சிலிண்டர்கள் இல்லாதபோது தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.