< Back
மாநில செய்திகள்
வெம்பக்கோட்டை அகழாய்வில் சங்கு வளையல்கள் கண்டெடுப்பு
மாநில செய்திகள்

வெம்பக்கோட்டை அகழாய்வில் சங்கு வளையல்கள் கண்டெடுப்பு

தினத்தந்தி
|
14 Nov 2024 4:29 AM IST

வெம்பக்கோட்டை அகழாய்வில் சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 14 குழிகள் தோண்டப்பட்டு உள்ளன.

இதில் ஏராளமான ஆட்டக்காய்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட முத்திரைகள், தங்க ஆபரணங்கள், செப்பு காசுகள், செவ்வந்தி கல், வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட ஈட்டி முனை, சுடுமண்ணால் ஆன உருவ பொம்மைகள் உள்பட ஏராளமான பொருட்கள் கிடைத்து உள்ளன.

இந்தநிலையில் கூடுதலாக இரும்பால் செய்யப்பட்ட பொருள், சங்கு வளையல்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட விளையாட்டு பொருள் ஆகியவை தற்போது கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து அகழாய்வு இயக்குனர் கூறுகையில், 3-ம் கட்ட அகழாய்வில் இதுவரை 2,500-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்து உள்ளன. கூடுதலாக அகழாய்வு குழிகள் தோண்டும்பட்சத்தில் இன்னும் ஏராளமான பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறினார்.

மேலும் செய்திகள்