< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தீபாவளி பண்டிகை; பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரை நாள் விடுமுறை
|29 Oct 2024 3:45 PM IST
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரை நாள் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது .
சென்னை,
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது .
அதன்படி , தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை முற்பகல் மட்டும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தீபாவளிக்கு அடுத்த நாளான வெள்ளிக்கிழமை (நவம்பர் 1 ) பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.