< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
புயல் எச்சரிக்கை: அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு
|29 Nov 2024 8:40 PM IST
புயல் எச்சரிக்கை காரணமாக அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
சென்னை,
தென் மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. . மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சக்திவேல் தெரிவித்துள்ளார் .