< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கோவையில் காட்டு யானை தாக்கி விவசாயி பலி
|3 Jan 2025 1:36 AM IST
வனப்பகுதியில் இருந்து உணவு தேடி காட்டுயானை ஒன்று கிராமத்திற்குள் புகுந்தது.
கோவை,
கோவை மாவட்டம் நீலாம்பதி பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி(வயது 51). விவசாயி. இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.நேற்றுமுன்தினம் இரவு இவர், சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து உணவு தேடி காட்டுயானை ஒன்று நீலாம்பதி கிராமத்திற்குள் புகுந்தது.
அந்த காட்டுயானை, பொன்னுச்சாமியின் குடிசை வீட்டு முன்பு வந்து நின்றது. காட்டுயானை, குடிசை வீட்டை சேதப்படுத்தி உள்ளே புகுந்தது. அங்கு அயர்ந்து தூங்கி கொண்டிருந்த பொன்னுச்சாமியை ஆக்ரோஷமாக தாக்கி தூக்கி வீசியது. இதில் பலத்த காயமடைந்த பொன்னுச்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து காட்டுயானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.