< Back
மாநில செய்திகள்
குடும்ப பிரச்சினை... விஷம் குடித்து போலீஸ்காரர் தற்கொலை முயற்சி
மாநில செய்திகள்

குடும்ப பிரச்சினை... விஷம் குடித்து போலீஸ்காரர் தற்கொலை முயற்சி

தினத்தந்தி
|
3 Nov 2024 6:29 PM IST

குடும்ப பிரச்சினை காரணமாக போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் வெள்ளப்பாக்கத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் நாகை மாவட்டம் நாகூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக அசோக்குமார் தனது குடும்பத்துடன் வெள்ளப்பாக்கத்திற்கு வந்தார்.

இந்த நிலையில் அசோக்குமாருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறி அவரது உறவினர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது, அசோக்குமார் விஷம் குடித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் அசோக்குமார் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், குடும்ப பிரச்சினை காரணமாக அசோக்குமார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளது தெரிய வந்தது. தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்