< Back
மாநில செய்திகள்
புயலால் பாதிக்கப்பட்ட 6 மாவட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு
மாநில செய்திகள்

புயலால் பாதிக்கப்பட்ட 6 மாவட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு

தினத்தந்தி
|
2 Dec 2024 7:54 PM IST

புயலால் பாதிக்கப்பட்ட 6 மாவட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த வருகிற 10-ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டது.

இந்த நிலையில், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த வருகிற 10-ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்