< Back
மாநில செய்திகள்
பெண் கல்வியை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
மாநில செய்திகள்

பெண் கல்வியை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

தினத்தந்தி
|
10 Nov 2024 4:09 PM IST

ஒரு பெண் கற்கும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாய் விளங்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

கடந்த 2021-ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்து படிக்க உதவி கேட்டு கடிதம் எழுதிய மாணவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவினார். கல்லூரிப் படிப்பை நிறைவு செய்த அவர் தற்போது வேலைக்குச் செல்கிறார். இந்த நிலையில் அவரை நேரில் அழைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "படிக்க உதவிட வேண்டும் என 2021-ம் ஆண்டு மாணவி ஷோபனா எனக்குக் கடிதம் எழுதினார். அவர் கல்லூரியில் சேரவும் படிக்கவும் உதவினேன். மூன்றாண்டுகளில் தனது கல்லூரிப் படிப்பை நிறைவு செய்து, வேலைக்குச் செல்லும் அவரை அழைத்து வாழ்த்தினேன்.

ஒரு பெண் கற்கும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாய் விளங்கும் என்பதையுணர்ந்து, பெண் கல்வியை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும்!" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்