< Back
மாநில செய்திகள்
அண்ணாமலை லண்டனில் இருந்து திரும்பி வந்தாலும் எதுவும் மாறாது: அமைச்சர் ரகுபதி
மாநில செய்திகள்

அண்ணாமலை லண்டனில் இருந்து திரும்பி வந்தாலும் எதுவும் மாறாது: அமைச்சர் ரகுபதி

தினத்தந்தி
|
15 Nov 2024 12:03 PM IST

அண்ணாமலை லண்டனில் இருந்து திரும்பி வந்தாலும் எந்த மாற்றமும் ஏற்பட போவது இல்லை என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

புதுக்கோட்டை,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்வதேச அரசியல் எனும் படிப்பிற்காக கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் லண்டன் சென்றார். லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மூன்று மாத கால படிப்பை முடித்து விட்டு அண்ணாமலை வரும் 28 ஆம் தேதி தமிழகம் திரும்புகிறார்.

அண்ணாமலை தமிழகம் திரும்பியதும் தனது வழக்கமான அதிரடி அரசியல் பாணியை கையில் எடுப்பார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம், செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அதற்கு அமைச்சர் ரகுபதி அளித்த பதில்கள் வருமாறு:-

அண்ணாமலை லண்டனில் இருந்து திரும்பி வந்தாலும் எந்த மாற்றமும் ஏற்பட போவது இல்லை. எம்.ஜி.ஆர் பாணியை விஜய் பின்பற்ற பார்க்கிறார். எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது. சர்வாதிகாரிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை. அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்" என்றார்.

நெல்லையில் நேற்று கட்சி நிர்வாகிகளுடனான கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக பேசிய சீமான், ஒரு நேர்மையாளர் சர்வாதிகாரியாகத்தான் இருக்க முடியும். சர்வாதிகாரம் இல்லாது எந்த செயலையும் சரி செய்ய முடியாது எனப்பேசியிருந்தார். சீமானை மறைமுகமாக குறிப்பிட்ட ரகுபதி, சர்வாதிகாரிகளுக்கு இடமில்லை என்று விமர்சித்துள்ளார்.

மேலும் செய்திகள்