< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஈரோடு: வீட்டில் கஞ்சா செடி வளர்த்த முதியவர் கைது
|11 Dec 2024 1:08 AM IST
வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையத்தில் ஒரு வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் இரவு கே.என்.பாளையம் நரசாபுரம் டேம் ரோட்டை சேர்ந்த பூங்கருப்பன் (வயது 70) என்பவருடைய வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டின் பின்புறம் 3 கஞ்சா செடி வளர்த்து இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பூங்கருப்பனை கைது செய்து, கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்தனர்.