< Back
மாநில செய்திகள்
ஈரோடு இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும்: அண்ணாமலை
மாநில செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும்: அண்ணாமலை

தினத்தந்தி
|
7 Jan 2025 5:55 PM IST

ஈரோடு இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

சென்னையில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழ்தாய் வாழ்த்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி உரிய மரியாதை கொடுத்திருக்கிறார். இருப்பினும் உப்பு சப்பு இல்லாத காரணத்திற்காக திமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. கவர்னரை அவமதித்து திமுகவினர் போஸ்டர் ஒட்டுகின்றனர்; காவல்துறை வேடிக்கை பார்க்கிறது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை திசை திருப்ப முயற்சி செய்கின்றனர்.

திமுக ஆட்சியில், எதிர்க்கட்சிகளின் ஜனநாயக வழியிலான போராட்டங்களுக்கு அனுமதி இல்லை. திமுகவின் வீண் போராட்டங்களுக்கு அனுமதியா?. நடந்து போனாலே கைது என்ற சூழலே தமிழகத்தில் நிலவுகிறது. இடதுசாரிகள் சொன்னதை போல இங்கு அறிவிக்கப்படாத எமர்ஜென்சி தான் தமிழகத்தில் நடக்கிறது.

ஈரோடு இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும். கடந்த முறைபோல் இல்லாமல் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் பேசி விரைவில் முடிவெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்