அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்த வேண்டும் - ஜி.கே.வாசன்
|அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பான சூழலை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,
சென்னை, கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்தி குத்து, தீவிர சிகிச்சை என்ற செய்தி அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை, எளிய நோயாளிகளுக்கு பாதுகாப்பற்ற, அச்சுறுத்தும் செய்தியாக இருக்கிறது.
இதற்கு என்ன காரணம் என்பதற்கு விசாரணை தேவை. மேலும் அரசு மருத்துவமனைகளில் ஏன் இந்த பாதுகாப்பற்ற நிலை. சமீப காலமாக குடிப்பழக்கத்திற்கும், போதைப்பொருளுக்கும் அடிமையாகி முறையற்ற செயல்கள் அதிகமாகிக்கொண்டே போகிறது.
அதன் அடிப்படையிலே முன் விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது.அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பற்ற சூழல் இருப்பதால் அதனை தவிர்க்கும் விதமாக தமிழக அரசு, அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார்