< Back
மாநில செய்திகள்
ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இன்று மின்சார ரெயில்கள் இயக்கம்
மாநில செய்திகள்

ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இன்று மின்சார ரெயில்கள் இயக்கம்

தினத்தந்தி
|
2 Nov 2024 4:23 AM IST

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின்சார ரெயில்கள் சேவை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக சென்டிரல்-அரக்கோணம், சென்டிரல்-சூலூர்பேட்டை மற்றும் கடற்கரை-செங்கல்பட்டு ஆகிய வழித்தடத்தில் இயங்கும் மின்சார ரெயில்கள் இன்று (சனிக்கிழமை) ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்