< Back
மாநில செய்திகள்
பொங்கல் அன்று சென்னையில் மின்சார ரெயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கம்
மாநில செய்திகள்

பொங்கல் அன்று சென்னையில் மின்சார ரெயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கம்

தினத்தந்தி
|
12 Jan 2025 4:15 PM IST

மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை,

பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி, சென்னையை சேர்ந்த ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். இதற்காக சிறப்பு பேருந்துகள், ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, நாளை மறுநாள் விடுமுறை தினம் (பொங்கல் பண்டிகை) என்பதால், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சூலூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் புறநகர் ரெயில்களும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் எனவும் தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்