மின்சார ரெயில்கள் ரத்து: தாம்பரம்- செங்கல்பட்டு இடையே சிறப்பு பஸ்கள்
|தாம்பரம்- செங்கல்பட்டு இடையே சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை,
சென்னை மாநகரத்தோடு புறநகர் பகுதியை இணைக்கும் பாலமாக விளங்கும் மின்சார ரெயில்களில் தினமும் லட்சக்கணக்கானவர்கள் பயணம் செய்கிறார்கள். அரசு, தனியார் அலுவகங்களில் பணிபுரிவோர் நீண்ட தூரத்தில் இருந்து வருவதற்கு மின்சார ரெயில் சேவை மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. பராமரிப்பு பணிக்காக மின்சார ரெயில்கள் ரத்துசெய்யும் போது சிரமங்கள் ஏற்படுகின்றன.
அந்த வகையில், பராமரிப்புகள் பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மார்க்கத்தில் 28 மின்சார ரெயில்கள் இன்று முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. காலை மற்றும் மாலை பீக் அவர்சில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் ரெயில்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு இயக்கப்பட்டுகின்றன. இன்று தொடங்கி உள்ள பராமரிப்பு பணிகள் நாள் குறிப்பிடாமல் நடைபெறுவதால் கடற்கரை-செங்கல்பட்டு மார்க்கத்தில் புதிய அட்டவணை தயாரிக்கப்பட்டு அதன்படி ரெயில்கள் இயக்கப்பட்டன.
இந்த நிலையில், மின்சார ரெயில்கள் ரத்து காரணமாக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 10 பஸ்களும், பாரிமுனைக்கும் பஸ்களும் இயக்கப்பட்டன. ஏற்கனவே கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு போதுமான பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் பயணிகளின் தேவை அறிந்து பஸ்கள் அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.