< Back
மாநில செய்திகள்
முட்டை விலை ஒரே நாளில் 40 காசுகள் சரிவு வியாபாரிகளுக்கு ரூ.4.50 கோடி இழப்பு
நாமக்கல்
மாநில செய்திகள்

முட்டை விலை ஒரே நாளில் 40 காசுகள் சரிவு வியாபாரிகளுக்கு ரூ.4.50 கோடி இழப்பு

தினத்தந்தி
|
3 March 2025 11:58 AM IST

கடந்த 4 நாட்களில் மட்டும் முட்டை விலை 90 காசுகள் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் சிறிய மற்றும் பெரியதாக உள்ள 1,100 முட்டை கோழிப்பண்ணைகளில் இருந்து தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கிருந்து தமிழகம் மட்டுமல்லாது, பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் முட்டை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆந்திரா, கர்நாடகாவில் பறவைக்காய்ச்சல் நோய் பரவிவருவதால், அங்கு முட்டை விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், நாமக்கல் கோழிப்பண்ணைகளில் முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.

இந்த நிலையில், நேற்று கூடிய தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை விலையை மேலும் 40 காசுகள் குறைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதாவது, ரூ.4-க்கு முட்டைகள் விற்பனை செய்யப்பட்டன. கடந்த 4 நாட்களில் மட்டும் முட்டை விலை 90 காசுகள் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், வியாபாரிகளுக்கு ரூ.4.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், சென்னையில் ஒரு முட்டை விலை ரூ.4.70 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கடைகளில் ரூ.5 முதல் ரூ.5.50 வரை முட்டை விற்பனை ஆனது.

மேலும் செய்திகள்