< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் தலைமை பலவீனமாகியுள்ளது: அமைச்சர் ரகுபதி
|22 Oct 2024 2:24 AM IST
தமிழ்நாடு, திராவிடம் என இந்த இரண்டையும் பிரிக்க முடியாது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திரும்ப பெறப்பட வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே கோரிக்கையாகும். எடப்பாடி பழனிசாமி பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார். திமுக கூட்டணியை அவரால் உடைக்க முடியாது. திமுக கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் என்பது அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, எல்லோராலும் பாடப்பட்டு வருகிற ஒன்று. தமிழ்நாடு, திராவிடம் என இந்த இரண்டையும் பிரிக்க முடியாது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் தலைமை பலவீனமாகியுள்ளது. அ.தி.மு.க.வோடு கூட்டணி சேர எந்த கட்சியும் தயாராக இல்லை. திருமாவளவன் திமுக கூட்டணியில் உறுதியோடு இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.