கூட்டணி அமைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி பார்த்துக் கொள்வார்: திண்டுக்கல் சீனிவாசன்
|மக்களை ஏமாற்றி திமுகவினர் ஆட்சியை பிடித்தனர் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல்லில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-
அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அதிமுகவை அழிக்க பல வழிகளில் வழக்கு தொடுத்தனர். அதை அனைத்தையும் தவிடு பொடியாக்கி, அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கட்டி காத்து உள்ளார். அவரை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தினகரனையும், பன்னீர் செல்வத்தையும் தூண்டி விட்டு அதிமுகவை உடைக்க முயற்சித்தார். ஆனால் பலிக்கவில்லை.
கள ஆய்வு செய்யும் முதல்-அமைச்சர் அரசு நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவரை ஒருமையில் தனிமனித தாக்குதல் நடத்துவதை எப்படி ஏற்று கொள்வது?. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி திமுகவினர் ஆட்சியை பிடித்து விட்டனர். மீண்டும் மக்கள் ஏமாற மாட்டார்கள். எனவே திமுகவின் ஏமாற்று வேலைகளை எடுத்து சொல்லி 2026-ம் ஆண்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவெற்றி பெற பணியாற்ற வேண்டும்.
வருகிற சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்த்துக் கொள்வார். நிர்வாகிகளாகிய நீங்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட பணிகளை கவனிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.