< Back
மாநில செய்திகள்
இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கக்கூடாது: புகழேந்தி ஆவேசம்
மாநில செய்திகள்

இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கக்கூடாது: புகழேந்தி ஆவேசம்

தினத்தந்தி
|
12 Feb 2025 5:21 PM IST

இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கக்கூடாது என்று புகழேந்தி ஆவேசமாக கூறினார்.

சென்னை,

அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு அருமையான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையாணை நீக்கப்பட்டுவிட்டது. இனி தடை இல்லை. விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு அனைத்து உரிமைகளும் உண்டு.

எனவே, இனி தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். பொதுச் செயலாளர் என்ற பதவியைப் பயன்படுத்தக்கூடாது. அதிமுக கட்சியின் பெயரை பயன்படுத்தக்கூடாது. உரிமையியல் வழக்கு நிலுவையில் இருக்கும் வரையில், எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே, அவர் இனியும் ஊர் உலகையும், ஊடகங்களையும் ஏமாற்ற வேண்டாம். இனி நாங்கள் தேர்தல் ஆணையத்தை நோக்கிச் செல்வோம்.

என்னுடைய நோக்கம் எம்ஜிஆர் கொடுத்த இரட்டை இலை சின்னத்தை முடக்குவது அல்ல. எடப்பாடி பழனிசாமியிடம் அது இருக்கக்கூடாது என்பதுதான், என்னுடைய நோக்கம். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், நடந்த 4 வருட அதிமுக ஆட்சி நீடிக்கவும் அவரே காரணம். அவர் உயிரிழக்காமல் இருந்திருந்தால், எடப்பாடி பழனிசாமி முதல்-அமச்சராக ஆகியிருக்க முடியாது. ஜெயலலிதாவை புதைத்தோம் ஆனால், அவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது புகழை மறைக்க, புதைக்க நினைக்கும் துரோகிகளுக்கு பாடம் புகட்டாமல் விடமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்