< Back
மாநில செய்திகள்
மக்களின் இதயங்களில்  வாழ்ந்து கொண்டிருக்கும் ஒப்பற்ற ஆளுமை... ஜெயலலிதாவுக்கு எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி
மாநில செய்திகள்

மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒப்பற்ற ஆளுமை... ஜெயலலிதாவுக்கு எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி

தினத்தந்தி
|
5 Dec 2024 9:26 AM IST

அமைதி, வளம், வளர்ச்சி பொருந்திய தமிழ்நாட்டைக் கட்டமைப்பதே ஜெயலலிதாவுக்கு நாம் செலுத்தும் புகழஞ்சலி என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "மக்களால் மக்களுக்காவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, தன் ஈடு இணையில்லா மக்கள் நலத் திட்டங்களால் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்த்துக் கொண்டிருக்கும் ஒப்பற்ற ஆளுமை, இந்த இயக்கத்தை, பல்வேறு சோதனைகளையும் கடந்து மக்களுக்காண பாதையில் தொடர்ந்து பயணிக்க உயிராய், உணர்வாய், உந்துசக்தியாய்த் திகழும் புரட்சித்தலைவி "அம்மா" அவர்களை அவர்தம் நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.

அம்மா வழியில் மக்களின் குரலாய் என்றென்றும் ஒலிப்போம். தீயசக்திகளின் ஆட்சியை விரட்டி, அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைத்து, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக் கூடிய அமைதி, வளம், வளர்ச்சி" பொருந்திய தமிழ்நாட்டைக் கட்டமைப்பதே அம்மா அவர்களுக்கு நாம் செலுத்தும் புகழஞ்சலி" என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்