< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி ஆஜர்
|19 Nov 2024 11:29 AM IST
சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி ஆஜரானார்.
சென்னை,
அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையில் ரூ.692 கோடி ஊழல் நடந்துள்ளதாக கூறிய அறப்போர் இயக்கத்திடம் ரூ.1.1 மானநஷ்ட ஈடு கேட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி மகாலட்சுமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் சாட்சியம் அளிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தனது தரப்பில் சாட்சியம் அளித்த நிலையில் வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 11-ம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
அன்றையதினம் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.