< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சியில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அன்னதான கூடம் - பூமி பூஜையில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சியில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அன்னதான கூடம் - பூமி பூஜையில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

தினத்தந்தி
|
27 Nov 2024 8:00 PM IST

கள்ளக்குறிச்சியில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அன்னதான கூடம் கட்டுவதற்கான பூமி பூஜையில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையான் கோவில் கட்டுமான பணி 20 கோடி ரூபாய் மதிப்பில், 5 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வருகிறது. இதில் 2 கோடி ரூபாய் மதிப்பில், கோவில் அன்னதான கூடம் கட்டுவதற்கான பூமி பூஜையை இன்று நடைபெற்றது.

பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகம் நடைபெற்ற இந்த பூமி பூஜையில், அ.தி.முக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு, பூமி பூஜை செய்து கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

மேலும் செய்திகள்