< Back
மாநில செய்திகள்
லாட்டரி அதிபர் மார்ட்டின்,  ஆதவ் அர்ஜுனாவின் வீடுகளில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை
மாநில செய்திகள்

லாட்டரி அதிபர் மார்ட்டின், ஆதவ் அர்ஜுனாவின் வீடுகளில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை

தினத்தந்தி
|
15 Nov 2024 8:25 AM IST

லாட்டரி அதிபர் மார்ட்டின், மருமகன் ஆதவ் அர்ஜுனாவிற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகிறார்கள்

கோவை,

கோவையை சேர்ந்த தொழில் அதிபர் மார்ட்டின் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். லாட்டரி விற்பனையில் முறைகேடு செய்து ரூ.910 கோடியை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

மார்ட்டினின் ரூ.450 கோடி அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை ஏற்கனவே முடக்கி இருக்கிறது. இதற்கிடையே கடந்த ஆண்டு மே மற்றும் அக்டோபர் மாதத்தில் கோவையில் உள்ள மார்ட்டின் மற்றும் அவருடைய மருமகன், உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மார்ட்டின் வீடு மற்றும் அவரது மருமகன் ஆதவ் அர்ஜுனாவிற்கு சொந்தமான வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இன்று இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சோதனைகள் முழுமை அடைந்த பின்னர், என்னென்ன ஆவணங்கள் சிக்கின? என்ற அதிகாரப்பூர்வ தகவலை அமலாக்கத்துறை தரப்பில் வெளியிடும் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்