< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மழை எதிரொலி.. சென்னையில் விமானங்கள் தாமதமாக இயக்கம்
|12 Nov 2024 9:45 AM IST
சென்னையில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
சென்னை,
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நள்ளிரவு முதல் தற்போது வரை மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொடர் மழை காரணமாக சென்னையில் விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து டெல்லி, மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் 30 முதல் 45 நிமிடங்கள் வரை தாமதமாகவும், ஐதராபாத் செல்லும் இண்டிகோ விமானம் 30 நிமிடங்கள் தாமதமாகவும் இயக்கப்படுகிறது.