< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை துரைப்பாக்கத்தில் நீர்வழிப்பாதையை தூர்வாரும் பணி - உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
|12 Nov 2024 5:55 PM IST
துரைப்பாக்கத்தில் நீர்வழிப்பாதையை தூர்வாரும் பணியை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
சென்னை,
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அமைச்சர்களும், அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அரசு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக சென்னை துரைப்பாக்கத்தில் ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதையை தூர்வாரும் பணி, கரையை வலுப்படுத்தும் பணி ஆகியவற்றை உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உடனிருந்தார்.