< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கட்சி நிகழ்ச்சிகளுக்கு காரில் வரக்கூடாது - டாக்டர் ராமதாஸ் அறிவுரை
|10 Nov 2024 8:35 PM IST
கட்சி நிகழ்ச்சிகளுக்கு காரில் வரக்கூடாது என்று நிர்வாகிகளுக்கு டாக்டர் ராமதாஸ் அறிவுறுத்தி உள்ளார்.
சென்னை,
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகள் கவனத்திற்கு.. பாமக சார்பில் நடத்தப்படும் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும் அதில் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் மகிழுந்துகளில் (கார்) வந்து பங்கேற்கக் கூடாது.
நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பும் பெண்கள் உள்ளிட்ட பாமகவினரை பேருந்து, மூடுந்துகளில் (வேன்கள்) அழைத்துக் கொண்டு அவர்களுடன் ஒன்றாக பயணித்து வர வேண்டும். இனிவரும் காலங்களில் இந்த அறிவுறுத்தலை அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.