பிரதமரை எதிர்க்கும் துணிவு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறதா? - மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி
|அதிமுக 2024 நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் குறைவாக பெற்றுள்ளது என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்
சென்னை ,
திமுக செயற்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சித்து பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது ,
டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக பாஜக-வை கண்டித்தாரா எடப்பாடி பழனிசாமி? புரட்சியாளர் அம்பேத்கரை கொச்சைப்படுத்தி பேசிய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு எதிராக கீச்சுக்குரலிலாவது கத்தினாரா? .
பிரதமர் மோடியை எதிர்த்துப் பேசுகிற துணிவு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறதா?. 2019ல் 20 தொகுதிகளில் போட்டியிட்டு 19.4%, 2024ல் 34 தொகுதிகளில் போட்டியிட்டு 20.4% வாக்குகளும் அதிமுக பெற்றுள்ளது .அதிமுக, 2019ஐ விட, 2024 நாடாளுமன்ற தேர்தலில் 12.58 விழுக்காடு வாக்குகள் குறைவாக பெற்றுள்ளது
அதிமுக தொண்டர்களுக்கு சாதாரண கூட்டல் வகுத்தல் கணக்கே தெரியாது என்று நம்பி பொய்க்கணக்கை அவிழ்த்துவிட்டுள்ளார் . எடப்பாடி பழனிசாமி சொன்ன கணக்கை அடிப்படை அறிவுள்ள அதிமுகவினரே நம்ப மாட்டார்கள். என தெரிவித்தார் .