< Back
மாநில செய்திகள்
பாம்பு கடித்து ஒரு மாதமாக உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய மருத்துவர்கள்
மாநில செய்திகள்

பாம்பு கடித்து ஒரு மாதமாக உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய மருத்துவர்கள்

தினத்தந்தி
|
24 Nov 2024 5:16 PM IST

ஒரு மாதமாக தனி கவனம் செலுத்தி சிறுவனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மிளகனுரை சேர்ந்த 12 வயது சிறுவன் ஆதி ஈஸ்வரன். சிறுவனை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விஷமுள்ள பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனால் உயிருக்கு போராடிய நிலையில், சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

சிறுவனுக்கு உடனடியாக விஷ முறிவு மருத்துகள் கொடுத்த மருத்துவர்கள், செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளித்தனர். சிறிது நாட்களுக்குப் பின் மூச்சு குழாயில் துளையிட்டு, சுவாசம் வழங்கப்பட்டது. மருத்துவர்கள் குழு ஒரு மாதமாக தனி கவனம் செலுத்தி, தொடர் சிகிச்சை அளித்து சிறுவனை கண்காணித்து வந்தனர். மருத்துவர்களின் தொடர் முயற்சி மற்றும் சிகிச்சையால் சிறுவன் தற்போது குணமடைந்துள்ளான். சிறுவனை காப்பாற்றிய மருத்துவர்கள் குழுவுக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்