< Back
மாநில செய்திகள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டி
மாநில செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டி

தினத்தந்தி
|
10 Jan 2025 10:49 PM IST

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்தார். இதையடுத்து, இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு 17ம் தேதி கடைசி நாளாகும்.

அதேவேளை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா? அல்லது திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிடுமா? என்பது குறித்து குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டார்.




மேலும் செய்திகள்