< Back
மாநில செய்திகள்
தி.மு.க. அரசை மாற்ற மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் - செல்லூர் ராஜு
மாநில செய்திகள்

தி.மு.க. அரசை மாற்ற மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் - செல்லூர் ராஜு

தினத்தந்தி
|
21 Nov 2024 9:48 PM IST

திமுகவினர் பேசாத பேச்சையா நடிகை கஸ்தூரி பேசி இருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

மதுரை,

மதுரை விளாங்குடி பகுதியில் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கட்சியின் கொடியை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரையில் அ.தி.மு.க. கொடி ஏற்றுவதற்கு காவல்துறையினர் இடையூறு கொடுத்ததற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன். தபால் தந்தி நகரில் நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் ஒருவர் தகாத முறையில் நடந்து சென்றுள்ளார். ஆசிரியர் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது பள்ளிக்குள் சென்று வெட்டுகிறார்கள்.

திமுகவினர் பேசாத பேச்சையா நடிகை கஸ்தூரி பேசி இருக்கிறார்? நடிகை கஸ்தூரிக்கு நான் ஆதரவாக பேசவில்லை. நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படை அமைத்து பிடித்துள்ளனர். ஒரு நடிகையைப் பிடிக்க இவ்வளவு அவசரம் தேவையில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக நீதிபதிகள் கூறுகின்றனர்.

தமிழக காவல்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியை ஒரு வருடத்திற்கு மேலாகியும் பிடிக்க முடியவில்லை. தி.மு.க. அரசை மாற்ற மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். நடிகர் விஜய் கட்சி ஆரம்பிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி என்று நானே பலமுறை சொல்லியுள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்