< Back
மாநில செய்திகள்
தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் கூட்டம்: நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்கள்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் கூட்டம்: நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்கள்

தினத்தந்தி
|
10 Nov 2024 1:57 PM IST

தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்களின் முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

சென்னை,

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்து அந்த தேர்தலை எதிர்கொண்டது. தற்போது, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலேயே தே.மு.தி.க. நீடித்து வருகிறது. விரைவில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையிலும், 2026 சட்டசபை தேர்தலை எதிர்க்கொள்ளும் வகையிலும், கட்சியின் கட்டமைப்புகளை மேம்படுத்துவது தொடர்பாக தே.மு.தி.க. உயர்மட்ட குழுக்கள் தொடர் ஆலோசனை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி

* தமிழகம் முழுவதும் இருந்து நமது கழகத்தினரும், பொதுமக்களும் கலந்து கொண்டு, அனைவரும் ஒன்று சேர்ந்து விஜயகாந்த் நினைவு நாளை வருடம் தோறும் அஞ்சலி செலுத்துவோம்.

* பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

* பாலியல் வன்கொடுமையையும் தடுக்கும் விதத்தில் மத்திய, மாநில அரசுகள் கடுமையான சட்டத்தால் தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* போர்க்கால அடிப்படையில் திட்டங்களை தீட்டி, சாலைகள் மற்றும் போக்குவரத்தை திறம்பட செயல்படுத்த வேண்டும்.

* மாநகராட்சி சொத்து வரியை மீண்டும் அதிகமாக உயர்த்தி, மக்களுக்கு கடுமையான சுமையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

* கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட ஏற்பாடுகள் செய்வதை கைவிட்டு விட்டு, தமிழக விவசாயிகளும், கர்நாடகா விவசாயிகளும் பயன்பெறுகின்ற வகையில் ராசிமணல் என்ற இடத்தில் அணை கட்டினால் இரண்டு மாநிலமும் நீர் வசதி பெறுகின்ற வகையில் தீர்வு காண வேண்டும்.

* டாக்டர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு சம்பளம் உயர்வும், ஆசியர்களுக்கு பழைய ஊதியம் மற்றும் அரசு ஊழியர்களுடைய பல்வேறு கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்.

* தமிழகத்தில் கனிமவள கொள்ளை நாளுக்கு நாள் அதிகரிப்பதையும் தென்காசி மாவட்டத்திலிருந்து கன்னியாகுமரி வழியாக கனரக வாகனங்கள் மூலம் கேரளா மாநிலத்திற்கு கனிம வளம் கடத்திச் செல்லப்படுவதை தடுக்க தடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

* மின்சாரக்கட்டணம் உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம்.

* தமிழக மக்களுக்காக கேப்டன் கொண்ட லட்சியத்தை நிறைவேற்றிட வேண்டும் என உறுதியேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் செய்திகள்